ஐந்து வகை பிராணனைப் பார்ப்போம்.
1. பிராண வாயு
இருக்குமிடம் – தலை
பணி – மூச்சு உடல் முழுவதும் பரவச் செய்கிறது. இரத்த ஒட்டத்தையும், சுவாசத்தையும் நடத்துகிறது. கேட்பது, சுவைப்பது, சிந்தனைகள், எண்ணங்கள், உணர்ச்சிகள், ரத்த ஒட்டம் இவற்றையெல்லாம் இயக்குவது.
2. உதான வாயு
இருக்குமிடம் – கழுத்து, தொண்டை
பணி – தலையை நேராக வைப்பது, தும்முவது, ஏப்பம் விடுவது மற்றும் வாந்தி – இந்த இயக்கங்களை நடத்துகிறது.
3. வியான வாயு
இருக்குமிடம் – மார்பு
பணி – உடலிலுள்ள நாடிகளின் (நாளங்கள்) மூலம் சக்தி உடலெங்கும் பரவ உதவுகிறது. உடலுக்கு ஊட்டச்சத்தை அளிப்பது, நரம்புகளை கட்டுப்படுத்துவது, ரத்த சுழற்ச்சியை சீர் செய்வது, ஆக்சிஜனை கொண்டு செல்வது – இந்த பணிகளை நடத்துகிறது.
4. சமான வாயு
இருக்குமிடம் – தொப்புள்
பணி – வயிற்றில் பசி எடுக்கவும், சூடு குறையாமலும் பார்த்துக் கொள்கிறது. பசி, தாகத்தை கன்ட்ரோல் செய்கிறது. ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது.
5. அபான வாயு
இருக்குமிடம் – அடிவயிறு
பணி – குடல் பகுதிகளுக்கு கீழே இருக்கும் உறுப்புக்களின் இயக்கத்தை நடத்துகிறது. உடலின் கழிவுகளை கீழ்ப்புறமாக வெளியேத் தள்ளும்.
நாடிகள்
பிராண சக்தி எவ்வாறு நம் உடலில் பரவுகிறது?
நம் உடலில் ஏராளமான நாடிகள் (72,000) உள்ளதாக சொல்லப்படுகின்றது. இவற்றில் முக்கியமானவை 10 நாடிகள். இவற்றில் மிக முக்கியமானவை 3 நாடிகள். இவை
1. இடை நாடிகள் – முதுகுத் தண்டின் இடது பாகத்தில் உள்ளது. இந்த இடை நாடி சந்திர நாடி என்று சொல்லப்படுகின்றது. நம் உடலுக்கு ஒய்வை தரும். ‘பாராசிம்பதெடிக் நர்வுஸ்’ (றிணீக்ஷீணீsஹ்னீஜீலீணீtலீமீtவீநீ ழிமீக்ஷீஸ்மீs)
களை இயக்குவது சந்திர நாடி தான்.
2. பிங்கலை நாடி – இது முகுதுத் தண்டின் வலது பக்கத்தில் அமைந்திருக்கின்றது. இதை சூரிய நாடி என்பார்கள். நம் உடலை
சுறுசுறுப்பாக வைக்க காரணமான ‘சிம்பதெடிக் நர்வுஸ்’ தூண்டப்படுவது சூரிய நாடியால் தான்.
3. சூட்சும நாடி – முதுகுத் தண்டின் மத்தியில் அமைந்திருக்கின்றது. சாதாரண மனிதர்களுக்கு தெரியாத நாடி. பிராணாயாமத்தின் போது மூச்சை இழுப்பதும், விடுவதும் இடை பிங்கலை நாடிகளால் இயக்கப்படுகின்றது. இந்த இரண்டு நாடிகளின் செயல்களுக்கு நடுவிலே, சூட்சும நாடி இயங்குகின்றது. அதாவது மூச்சை உள்ளிருத்தும் போது
சூட்சும நாடி இயங்க தொடங்குகின்றது. இந்த சக்தியை சில யோகிகள் குண்டலினி சக்தி என்கின்றனர்.
பந்தங்கள்
பந்தங்கள் என்றால் முடிச்சுகள் – ஒன்றையன்று சேர்ப்பவை. பந்தங்கள் பிராணயாமத்தின் முழுப் பலனை பெற உதவுகின்றன. பந்தங்கள் மூன்று வகைப்படும். இவை பிராணாயாம பயிற்சிகள்.
1. உத்தியான பந்தம் – உத்தியான என்றால் பறப்பது என்று பொருள். இந்த பந்தம் டையாஃபர்ம் (ஞிவீணீஜீலீக்ஷீணீரீணீனீ) இயக்கத்திற்கு உதவுகிறது.
2. ஜாலாந்தர பந்தம் – ஜாலா என்றால் வலை. சிலந்தி வலை என்று சொல்லலாம். இது பிராணாயாமத்துக்கு செய்யப்படும் பந்தம். இதில் முகத்தாடை, மார்பில் அமிழ்ந்து இருக்க வேண்டும்.
3. மூல பந்தம் – மூலம் என்றால் ஆரம்பம் அல்லது அடிவேர் என்று பொருள். இது ஆசன வாயுக்கும், விதைப்பைக்கும் நடுவில் இருக்கிறது. ஆசன வாயை சுருக்கி விரித்து செய்வது மூல பந்த பயிற்சியாகும்.
சக்கரங்கள்
இடை, பிங்கலை, சூஷ்ம மூன்று நாடிகளும் சேரும் சந்திப்புகள் சக்கரங்கள் எனப்படுகின்றன. பிரசித்தி பெற்ற யோகிகளும், ரிஷிகளும், சக்கரங்களின் மனதை ஒரு நிலைப்படுத்தி தியானம் மற்றும் தவம் செய்து வந்துள்ளதாக சொல்லப்படுகின்றது. உடலில் ஏழு முக்கியமான சக்கரங்கள் உள்ளன.
1. மூலாதாரம் – முதுகுத் தண்டின் அடியில் இருப்பது.
2. சுவாதிஸ்தைய – இந்த சக்தி தொப்புளுக்கும், ஜனன உறுப்புகளுக்கும் நடுவில் உள்ளது.
3. மணி பூரகம் – தொப்புளில் இருப்பது.
4. ஆனந்த சக்கரம் – இதய பிரதேசத்தில் இருப்பது.
5. விசுதா – தொண்டையின் இருப்பிடம்.
6. அஸ்னா – இரு கண்ணிமைகளுக்கு நடுவில் இருப்பது.
7. சகஸ்ரார – சிரசில் அதாவது மூளையில் அமைந்துள்ளது
0 comments:
Post a Comment