திருமந்திரம் – எட்டும் இரண்டும்
எட்டும் இரண்டும் – திருமந்திரம்
சிறு வயதில் கிராமபுறத்தில் குழந்தைகளை கடைக்கு செல்ல ஒரு 2 (ரெண்டு) , 8(எட்டு) வெச்சு இங்க இருக்கிற கடைக்கு போயிட்டு வா கண்ணு என்று சொல்வதை கேள்வி பட்டு இருக்கிறீர்களா?
திருமூலர் மற்றும் எல்லா ஞானிகளும் இந்த 2 , 8 பற்றி பேசுகிறார்கள் – நாம் வழக்கத்தில் உபயோகிக்கும் இந்த ரெண்டு மற்றும் எட்டுக்கும் ஞானிகள் சொல்லும் 2, 8 க்கும் சம்பந்தம் இருக்கிறதா?
நிச்சயமாக இருக்கிறது!
முதலில் ஞான சற்குரு சிவ செல்வராஜ் ஐயாவின் திருமந்திர பாடலுக்கான விளக்கம் பார்ப்போம் பின் தமிழோடு இது எவ்வாறு சம்பந்த பட்டிருக்கிறது என்பதை அடுத்து பார்ப்போம்.
“எட்டும் இரண்டும் அறியாத என்னை
எட்டும் இரண்டும் அறிவித்தான் என்நந்தி
எட்டும் இரண்டும் அறிவால் அறிந்தபின்
எட்டும் இரண்டும் இலிங்கமதாகும்.”
எட்டும் இரண்டும் அறிவித்தான் என்நந்தி
எட்டும் இரண்டும் அறிவால் அறிந்தபின்
எட்டும் இரண்டும் இலிங்கமதாகும்.”
இவைதான் சூரிய சந்திரன், சிவசக்தி! எட்டும் இரண்டும் பத்தாகிய அக்னிஸ்தானம் ஆத்ம ஸ்தானம் நம் தீ தான் நந்தி! இரு கண் மணி ஒளியை பெருக்கி உள்ளே ஜீவஜோதியை நம் தீயை அடைந்ததால் அறிவித்தான் நந்தி! நந்தி அருளால் அறிவு துலங்க அறிந்தனன் நான்! அது என்ன? ஆத்ம ஜோதி லிங்க வடிவமாம்! எட்டும் இரண்டுமான கண்களும் லிங்கம் போல தோன்றும் என்கிறார். சிவலிங்கத்தை மேலிருந்து பார்க்க வேண்டும்… பார்த்தால் மூன்று வட்டமே லிங்கம் என்கிறார். ஞான சற்குருவின் உபதேசத்தால்தான் எட்டும் இரண்டும் அறிய முடியும். எட்டும் இரண்டும் பற்றி சொல்லாத ஞானிகளே இல்லை! இது உங்கள் அறிவுக்கு எட்ட வேண்டும். அடியேனால் முடிந்தவரை உங்கள் அறிவுக்கு எட்டும்படியாக கூறி விட்டேன்! எட்டாத தூரத்தில் இல்லை! எட்டி பிடியுங்கள்! எண் குணன் அருள் பரிபூரணமாக கிட்டும்!
0 comments:
Post a Comment